அம்பிகாவின் மகனுக்கு லிவிங்ஸ்டன் மகள் ஹீரோயின்!



‘கலாசல்’ மூலம் இயக்குநராகிறார் அஸ்வின் மாதவன். சுந்தர்.சி, பத்ரி ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

போலவே, ஹீரோயினாக, நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா அறிமுகம் செய்யப்படுகிறார். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்ப்ரியா ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு பாபுகுமார். இசை நிஜாமுதீன். கலைத்தாய் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.சி. பாலு தயாரிக்கிறார்.

“மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு நமக்கு தேவையில்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதைக் கேட்டுப் பெறுவது பண்ட மாற்றுமுறை மாதிரியான ஒரு வியாபாரம்தான். நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்ப்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் ‘கலாசல்’ படத்தோட கதை’’ என்கிறார் இயக்குநர் மாதவன்.

- எஸ்ரா