பற்றியெரியும் நட்பு!



பொதுவாக ஹீரோயின்கள் ஒருவரோடு ஒருவர் நட்பு பாராட்டுவது அபூர்வம். எங்காவது விழாக்களில் சந்தித்துக் கொள்ளும்போதுகூட சம்பிரதாயமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் தருவார்களே தவிர, மனசுக்கு நெருக்கமான நட்பு என்பது அரிதுதான்.ஆனால்-பிரியா ஆனந்தும், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ விசாகா சிங்கும் வேற மாதிரி.

தினமும் வாட்ஸப் சாட்டிங்கில் கடலை போடுபவர்கள், அவ்வப்போது நேரிலும் சந்தித்து நட்பை தீயென போற்றி பாதுகாக்கிறார்கள். ஒரு படத்தில் புக் ஆனால், அதில் வேறொரு நல்ல கேரக்டர் இருந்தால் மற்றவருக்கு வாய்ப்பு தாருங்கள் என்று இயக்குநர்களிடம் கேட்கிறார்கள்.

- ராஜா இக்னேஷியஸ்