அயர்லாந்து அடுப்பு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘உட்டாலங்கடி’ பகுதி, வாரா வாரம் நாங்கள் இதுவரை அறியாத அரிய தகவல்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ‘வண்ணத்திரை’ வார இதழுக்கே புது நிறத்தை இப்பகுதி தருகிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.

நடுப்பக்க ஆஷ்னா ஜாவேரிக்கு ‘அயர்ன் செய்த இடுப்பு’ என்று புகழ்மாலை சூட்டியவர் வாயில் சர்க்கரை அள்ளிக் கொட்ட வேண்டும். ஆனால், ‘அயர்லாந்து அடுப்பு’ என்பதற்குத்தான் அர்த்தம் தெரியவில்லை.
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

உழைப்பின் உயர்வை ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் உணர்த்திச் சொன்ன நடிகர் விக்னேஷ் பாராட்டுக்குரியவர். அவர் கைவசம் படமிருக்கிறதோ இல்லையோ, என்றுமே ஹீரோதான்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

முன்னட்டை மற்றும் நடுப்பக்கத்தில் ஆஷ்னா ஜாவேரி, பின்னட்டையில் தமன்னாவென்று பின்னிவிட்டீர்கள் சார்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

அரசியலுக்குப் போகாமல் கலையுலகில் களமிறங்கி இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவரின் மகன் ‘புகழ்’ பெற ‘சிகப்பு’க் கம்பளம் விரித்து வரவேற்போம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சிறிய படமோ, பெரிய படமோ.... எந்தப் படத்தையும் விடாமல் பாரபட்சமின்றி எல்லாவற்றுக்கும் விமர்சனம் எழுதும் ஒரே பத்திரிகை நம்ம ‘வண்ணத்திரை’ மட்டும்தான். தொடரட்டும் உங்கள் சேவை.
- கு.கணேசன், சென்னை-26.

‘ஏ’ங்கறவங்க மட்டும் தியேட்டருக்கு வந்தா போதும் என்று தைரியமாகச் சொல்லும் இயக்குநர் சன்தோஷ் ஜெயக்குமார் நிஜமாகவே வித்தியாசமான டைரக்டர்தான்.
- ரமேஷ் கிருஷ்ணன், நாகர்கோவில்.