தலைக்கு மேலே வேலை!ஏற்கனவே ‘ஹெட்’டுக்கு மூன்று படம் பண்ணிவிட்டதால், நான்காவது படத்துக்கு ஸ்க்ரிப்ட் செய்வதில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டாராம் சிவ இயக்குநர். இந்நேரம் படப்பிடிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், திடீரென கதையைக் கேட்ட ஹெட், திருப்தியில்லாமல் ‘இன்னும் கொஞ்சம் ஷார்ப் பண்ணி கொண்டாங்க’ என்று படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டாராம்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இயக்குநர். நம்பர் நடிகையிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கி வைத்திருக்கும் இயக்குநர், இதனால் தயாரிப்புத் தரப்புக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறாராம். இரவு பகலாக கதையை பட்டை தீட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறதாம். ஷூட்டிங்குக்காக ஐதராபாத்தில் ஏற்பாடுகளைச் செய்துவிட்ட தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மீது கடுப்பாக இருக்கிறதாம்.

- ஆசை