ரெஜினா உஷார்!தெலுங்கில் சக்கைப்போடு போடுகிறார் ரெஜினா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ‘ஆவ்’ படத்துக்கு ஆரவாரமான வரவேற்பாம். சில காலம் முன்பாக ‘ரெஜினா நீங்க ஓர் அருமையான நடிகை. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்’ என்று சமூகவலைத்தளத்தில் இயக்குநர் செல்வராகவன் பாராட்டி இருந்தாராம்.

அதைவைத்து தெலுங்கில் பிடித்த இடத்தை தமிழிலும் பிடிக்கலாம் என்று திட்டமிட்டு செல்வராகவனிடம் வாய்ப்பு கேட்கப் போகிறேன் என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். ‘வேலியிலே போற ஓணானைத் தூக்கி ஏம்மா சுடிதாருக்குள்ளே விட்டுக்கப் போறே’ என்று சில அனுபவ நடிகைகள் அட்வைஸ் சொல்லியிருக்கிறார்களாம். அதன்பிறகே ரெஜினா கொஞ்சம் உஷாராகி இருப்பதாக சொல்கிறார்கள்.

- மைக்கேல் பாரதி