கூச்சப்படுகிறார் கேத்தரின்!‘கலகலப்பு-2’ படத்தில் காட்டுகாட்டுவென காட்டிய கேத்தரின் தெரசா சிறுவயதில் ரொம்பவும் கூச்ச சுபாவமாக இருந்தாராம்.“அப்போவெல்லாம் வெளியாள் யாரு கிட்டேயாவது பேசணும்னாலே கூச்சப்படுவேன். என்னோட பெற்றோர்தான் என்னை என்கரேஜ் பண்ணி, ஷை டைப்பை போக்கினாங்க.

சினிமாவுக்கு வந்த புதுசுலே கேமரா முன்னாடி நிக்கவே வெட்கப்படுவேன். ஆனா, நான் நடிச்ச படங்களை தியேட்டர்லே பார்க்குறப்போ, அதுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை உணர்ந்து இது தேவையில்லாத வெட்கம் என்கிற முடிவுக்கு வந்தேன்” என்று சொல்கிறார் கேத்தரின்.போட்டோவை பார்த்தா, அம்மணி கூச்சப்படுற மாதிரியா தெரியுது?

- மைபா ராஜா