தளுக்....மொளுக்!சரோஜாதேவி பதில்கள்

* செஸ் ஆட்டம், செக்ஸ் ஆட்டம் - இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முந்தையதில் மூளைக்கு அதிக வேலை.

* கண், காது, மூக்கு, கை, கால் - எல்லாமே இரண்டு இருக்கும்போது இதயம் மட்டும் ஏன் ஒன்று?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வேறொரு உறுப்புகூட இரண்டு உண்டு; கிட்னியைச் சொன்னேன். இதயம் தவிர்த்து ஒரே உறுப்பு இருக்கும் வேறு உறுப்புகளும் உண்டே. அதெல்லாம் ரெண்டாக இருந்தால் பொழைப்பு கிழியும்.

* ஆற்றில் குளித்த அனுபவம் உண்டா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
குளித்ததும் உண்டு, கூத்தடித்ததும் உண்டு.

* மாராப்பு விலகியதும் மகிழ்ச்சி பொங்குகிறதே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
பொங்கிடிச்சின்னா பிரயோசனமில்லையே சார்!

* ‘தளுக்’, ‘மொளுக்’, ‘கும்முன்னு’, ‘செமையா’, ‘மஜாவா’ இதெல்லாம் தமிழ் வார்த்தைகளா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பாலியல் அரட்டை பயன்பாடுகளுக்காக எல்லா மொழிகளிலுமே இம்மாதிரி வார்த்தைகள் அதுவாக உருவாகிவிடும் சார்.