பாடவும் செய்கிறார் விஜய் சேதுபதி!அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கும் படம் ‘பேய் பசி’. ஹீரோ ஹரி கிருஷ்ணா பாஸ்கர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை நம்பி இந்தப் படத்தை எடுக்கிறார்கள். இப்படத்தின் கிளப் பாடல் ஒன்றுக்கு வித்தியாசமான - அதே சமயம் நன்கு அறிமுகமான - குரல் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது.

படக்குழுவினருக்கு விஜய்சேதுபதியை பாடவைக்க ஆசை. ஒப்புக் கொள்வாரா என்று தயக்கத்தோடு கேட்டபோது, சந்தோஷமாக சம்மதித்திருக்கிறார் சேதுபதி. பாடல் செம அசத்தலாக எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறதாம்.

‘‘நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவைத் தரும் விஜய் சேதுபதி எங்களுடைய ‘பேய் பசி’  படத்தின் மூலம் பாடகராக மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியைக் கடைப்பிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலையும்  தனது அதே வசீகர பணியில் பாடி அசத்தியுள்ளார்’’ என்கிறார் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயன்.

- எஸ்