இயக்குநர்களை சுரண்டும் தயாரிப்பாளர்!அறிமுக இயக்குநர்களின் காட்ஃபாதர் என்று இப்போது இண்டஸ்ட்ரியில் அந்த தயாரிப்பாளரைத்தான் சொல்கிறார்கள். சமீபத்தில் இயக்குநராகவும் உருவெடுத்தார்.

இப்போது முன்னணியில் இருக்கும் ஏராளமான இயக்குநர்களையும், நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர். உள்ளத்திலும் உடலிலும் பெரியவர் என்றாலும், அவர் தயாரிக்கும் படங்களின் பட்ஜெட் என்னவோ சிறுசுதான்.
ஆனால் -விஷயம் தெரிந்தவர்கள் வேறுமாதிரி சொல்கிறார்கள்.

அறிமுக இயக்குநர்களிடம் அநியாயத்துக்கு கறார் காட்டுவார். சொற்பமான சம்பளம்தான் கொடுப்பார். ‘உன்னை நம்பி கோடிகளில் முதலீடு செஞ்சிருக்கேன்’ என்று அடிக்கடி பதற்றம் கூட்டிக்கொண்டே இருப்பார்.சில நேரங்களில் இயக்குநர் கொடுத்த பட்ஜெட்டையும் மீறி படத்தின் செலவு எகிறிவிடும். இதற்கு நட்சத்திரங்களின் கால்ஷீட் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உண்டு.

 அம்மாதிரி கூடுதல் செலவு ஏற்பட்டால், இயக்குநரே பைனான்ஸ் வாங்கிப் படத்தை முடிக்க வேண்டும் என்றும் மிரட்டியதுண்டாம். அதற்கு ஒத்துவராத இயக்குநர்களுக்கு சம்பளமே தரமாட்டார்.இப்படியெல்லாம் முழநீளத்துக்கு குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்கள்.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?

- மிஸ்டர் எக்ஸ்