ஆர்.கே.நகரில் மாற்றம் நிச்சயம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பெட்டிக்கடையில் ‘வண்ணத்திரை கொடுங்க’ என்று கேட்டு வாங்கும்போது என்னை  அக்கம் பக்கத்து ஆண்கள் ஒருமாதிரி பார்ப்பதுண்டு. ஆனால், என் அலுவலகத்தில்  சினிமா பற்றி ஏ டூ இசட் பேசி அத்தனை பேரையும் அசத்தும் ஒரே பெண் நான்தான்.  இதற்குக் காரணம் ‘வண்ணத்திரை’ வாசிப்பு என்கிற ரகசியம் யாருக்கும் தெரியாது.

 பெரிய நட்சத்திரங்கள், பெரிய டெக்னீஷியன்கள் தவிர்த்து அடுத்தடுத்த  நிலையில் இருப்பவர்களைப் பற்றி ‘வண்ணத்திரை’ தவிர்த்து வேறெந்த பத்திரிகையும்  கண்டுகொள்வதில்லை. மீடியம் மற்றும் குறைந்த பட்ஜெட் படங்கள் குறித்த  கரிசனமும் ‘வண்ணத்திரை’ தவிர்த்து வேறெந்த அச்சு ஊடகத்துக்கும் கிடையாது.
- குந்தவை, தஞ்சாவூர்.

தீரனுக்கு சல்யூட் அடித்து ‘வண்ணத்திரை’ எழுதிய விமர்சனம் கம்பீரம். ஒரு குற்ற சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளின் ரியல் ஆக்‌ஷன் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டிய இந்தப் படம் காவல்துறையின் மாண்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஆர்.கே.நகரில் மாற்றம் நிச்சயம்’ என்று எந்த நினைப்பில் தலைப்பு எழுதினீர்களோ! இப்போது விஷால் எல்லாம் வேட்புமனு செய்து ஒரே தள்ளுமுள்ளு ஆகியிருக்கிறது.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஷாதிகாவின் வார்த்தைகளில் துள்ளல் இருக்கிறது. அவரது படிப்பும், நடிப்பும் சிறக்கட்டும்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

விடையைத் தெரிந்துகொண்டேதான் வாசகர்கள் வினா எழுப்புவார்கள் என்பது ‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியில் வழக்கம். ஆனால், வளைதங்கா கொழுத்த நண்டுக்கு சரோஜா கொடுத்த விடை யாருமே எதிர்பாராதது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டதில்லை’ என்கிற ஒன்லைனர் மூலமாகவே வசிக்கிறார் இயக்குநர் ஷாஜி. அவர் முதன்முதலாக இயக்கும் ‘வாண்டு’ பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.