பேயெல்லாம் பாவமாம்!பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் உதவியாளர் தீபக் நாராயணன் இயக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவங்க’. இதன் நாயகன் அரசு. இவர் ‘வல்லதேசம்’, ‘ஐவர்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர்.

கேரளத்து புதுவரவு டோனா சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, ஸ்ரீஜித் ரவி, சிவகுமார்,செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிரசாந்த். இசை நவீன் சங்கர். கதை, திரைக்கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்.

‘‘பேய்கள் என்றால் பயமுறுத்தும். அதுதான் பேய் பற்றி எடுக்கும் சினிமாக்களின் ஃபார்முலா. இந்த எல்லைக் கோட்டினை அழித்து புது ட்ரெண்டில் உருவாகியுள்ள பேய்ப்படம் ‘பேய் எல்லாம் பாவங்க’. முழுக்க முழுக்க ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒரு பாதியாகவும், வெளிப்புறங்களில் நடக்கும் சம்பவங்கள் மறு பாதியாகவும் நடக்கும் கதை இது.

படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. என்னுடைய குருநாதர் படங்களிலிருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் பேய்ப்படமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் தீபக் நாராயணன்.

- எஸ்