பிரிச்சி மேயுறோம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அளவுக்கதிகமாக மன்மத வெள்ளம் பாயும்போது அணை போடுவது சாத்தியமில்லை. சாமியார்கள் குறித்து சரோஜாதேவி அளித்த பதில் யதார்த்தம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

ஹலோ சாரே! ‘வண்ணத்திரை’ வாசிக்கத் துவங்கியதிலிருந்து காரை ஓட்ட மட்டுமல்ல, பிரிச்சி மேயவும் நல்லாவே கத்து வெச்சிருக்கோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

வித்தியாச வில்லனாக தலை காட்டும் ஆர்.கே.சுரேஷ் சாருக்கு கல்யாணம் என்கிற தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர்களுக்கு வில்லனாக இருந்தாலும், மனைவிக்கு ஹீரோவாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

சதாவின் புளோஅப்பை பார்த்ததிலிருந்து சதா அதே நெனைப்புதான். நெனைப்புதான் பொழைப்பை கெடுக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘ஸ்பைடர்’ படத்துக்கு சரியான விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்கு வீக்கோடர்மரிக் தடவவேண்டிய அளவுக்கு வீக் என்று நீங்கள் குறிப்பிட்டது சரியான வார்த்தைகள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

முன்னட்டைப்பட அனுலாவண்யாவின் லாவண்யத்தில் மதி கெட்டான் சோலையில் மாட்டியவன் மாதிரி மதிமயங்கிப் போயிருக்கிறேன்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

கையை மட்டுமே நம்பும் வாலிப வயோதிக அன்பர்களுக்கான திரைப்படம் என்று ‘ஹரஹர மஹாதேவி’க்கு கரெக்டாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.
- ராமச்சந்திரன், தேனி.
(‘டைட்டில்ஸ் டாக்’ தொடர், அடுத்த வாரம் வழக்கம்போல வெளிவரும்)