மார்க்கெட்டில் புதுசு!ஆத்மிகா

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசையை முறுக்கு’ மூலம் தமிழ் ரசிகர்களை முறுக்கேற்றியிருக்கும் அக்மார்க் தமிழ் ஃபேமிலி லுக் பொண்ணு. டிவி விளம்பரம், புரோகிராம் காம்பியரிங் என்று ஏகப்பட்ட படிநிலைகளைக் கடந்து ஹீரோயின் ஆகியிருக்கும் பப்ளி கேர்ள். வாய்ப்புகள் குவிந்தாலும், அடுத்த அடியை மிகவும் கவனத்தோடு எடுத்து வைக்க வேண்டும் என்று கதைத்தேர்வில் கறாராக இருக்கிறார்.

அதிதி பொஹன்கார்

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் சரோஜாதேவியாக அதிரடி என்ட்ரி. 22 வயசு அதிதியின் குடும்பமே கலைக்குடும்பம்தான். பாடகி, மேடை நாடகம் என்று ஏற்கனவே பலமான பேக்ட்ராப். அட்டகாசமாக பேட்மிண்டன் ஆடுவார். மகாராஷ்டிராவுக்காக ரன்னிங்கில் தங்க மெடல் வாங்கியிருக்கிறாராம். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’யின் ராணி இவர்தான்.

தொகுப்பு : ஷாலினி நியூட்டன்