மார்க்கெட்டில் புதுசு!சாயேஷா சாஹல்

இருவது வயசுதான் ஆகிறது. குடும்பமே பாலிவுட்டில் ஃபேமஸ் என்பதால் சினிமா என்ட்ரி ஈஸியாக ஆகிவிட்டது. இங்கிலாந்தில் படித்ததாலோ என்னவோ ஐரோப்பிய லுக்கில் இருக்கிறார்.

தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் முடித்துவிட்டு ‘வனமகன்’ படத்தில் அழகம்மாவாக தமிழுக்கு வந்தவர். பிரபுதேவா டைரக்‌ஷனில் கார்த்தி, விஷால் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ரோஜா’, விஜய சேதுபதியோடு ‘ஜூங்கா’ என்று பொண்ணு கையில் வெயிட்டான பிராஜக்ட்ஸ்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில் சின்ன ரோலில் அறிமுகமானவர்தான் என்றாலும், இப்போது காற்று ஷ்ரத்தாவின் காட்டில்தான் வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது. ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ என்று தமிழில் அடுத்தடுத்து பளிச்சிடும் ரோல்கள் கிடைத்தது.

தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் யங் ஹீரோவான நிவின்பாலியோடு ‘ரிச்சீ’ செய்திருக்கிறார். தமிழ், கன்னடம் என்று இரட்டைக் குதிரை சவாரியை அனாயாசமாக ஹேண்டில் செய்யும் ஷ்ரத்தாதான் கன்னட சினிமாவை ஓவர்சீஸில் கொண்டாட வைத்த ‘யூ டர்ன்’ படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.