மார்க்கெட்டில் புதுசு!ரூஹி சிங்

‘போங்கு’ மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த மும்பை புயல். பாலிவுட்டையே கவர்ச்சியால் கலக்கிய ஐந்து ‘காலண்டர் கேர்ள்ஸ்’களில் ஒருவர். இரண்டு இந்திப் படங்கள், ஓர் ஆங்கில ஆவணப்படம் என்பது இந்த ஜெய்ப்பூர் பால்கோவாவின் டிராக் ரெக்கார்ட். 2014ஆம் ஆண்டு மிஸ் உலக அமைதி மற்றும் மனிதநேயம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயசுதான் ஆகிறது. தாராளமயத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதால் தாராளமாக வாய்ப்புகளைப் பெறுவார் என்று நம்பலாம்.

அனு இம்மானுவேல்

‘துப்பறிவாளன்’ மூலம் தமிழுக்கு வந்திருக்கும் துறுதுறு பொண்ணு. அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து மாடலிங் பேக்கிரவுண்டோடு சினிமாவுக்கு வந்தவர். மலையாளத்தில் நிவின்பாலியின்  ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ மூலம் ஸ்டார்ட்டிங்கே புயல்வேகம். மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அனு இம்மானுவேல் செமத்தியாக பிக்கப் ஆகியிருக்கிறார். அடுத்து கன்னடத்திலும் என்ட்ரி ஆகியிருக்கிறார். அனேகமாக அடுத்த ஆண்டு அனு இம்மானுவேலின் ஆண்டாக இருக்கலாம்.