மார்க்கெட்டில் புதுசு!சனா மக்பல்

இம்போர்ட் ஃப்ரம் மஹாராஷ்டிரா. வடக்கே ரியாலிட்டி ஷோ, டிவி சீரியல் என்று மக்பலின் கொடி உயரே பறக்கிறது. தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படம் நடித்துவிட்டு தமிழில் ‘ரங்கூன்’ மூலம் என்ட்ரி. அஞ்சடி பத்து இன்ச் என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம். சனா சிரித்தால் நிஜமாகவே சில்லறை சிதறுகிறது என்பதால் இளைஞர்களின் இதயங்களில் இயல்பாகவே நிறைகிறார்.

பொன் ஸ்வாதி

‘நான் என்ன அந்த மாதிரி பொண்ணுன்னு நெனைச்சீங்களா?’ என்று அறச்சீற்றத்தோடு இவர் எழுப்பிய கேள்வி இன்டர்நெட்டில் செம ஹிட்டு. கில்மாவாக படம் எடுக்கும் வேலுபிரபாகரனின் ‘ஒரு இயக்குநரின் காதல் கதை’ மூலம் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார்.

கைவிரல் ரேகை தேயத்தேய தமிழ் இளைஞர்கள் பொன் ஸ்வாதியை ஸ்மார்ட்போனில் தேடித்தேடிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏராளமான டிவி சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்வாதியின் வண்ணப் படங்களை கூகுளில் தேடிக் காண்பதற்கே பெரிய ரசிகர் மன்றங்கள் உருவாகி வருகின்றன.