மார்க்கெட்டில் புதுசு!க்ரீத்தி கர்பந்தா

பெயர் கொஞ்சம் கடமுடாவென்று இருந்தாலும் இந்த 27 வயது இளம்புயல் ச்சோ ஸ்வீட். இந்தி, தெலுங்கு, கன்னடமென்று இருபதுக்கும் மேல் படம் பண்ணிவிட்டு ஹாயாக கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். ‘புரூஸ்லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிளாமரில் வூடு புகுந்து அடித்தவர். ஜுவல் டிசைனிங்கில் டிப்ளமோவாம். பளீர் நிறமும், பளிச் கண்களும் இவரது பிளஸ் பாயிண்ட்ஸ்.

அதுல்யா ரவி

‘காதல் கண்ணை கட்டுதே’ மூலம் இளம் ரசிகர்களின் கனவில் கண்ணாமூச்சி ஆடும் கோயமுத்தூர் பொண்ணு. ஐடியில் பி.டெக்., கம்ப்யூட்டர் சயன்ஸில் எம்.டெக் என்று அதுல்யாவின் ப்ரொஃபைல் வெரி ஸ்ட்ராங். டப்மாஷ் வீடியோவில் ‘குஷி’ ஜோதிகாவை இவர் இமிடேட் செய்தது யூட்யூப் ஏரியாவில் வைரல் ஹிட். குண்டுமல்லி கண்ணும், டோர் நெக்ஸ்ட் கேர்ள் லுக்கும் அதுல்யாவின் ஸ்பெஷல். வயசு, ஜஸ்ட் 24.