Party Bird!



சினிமா விழா எதுவாக இருந்தாலும் கணவரைத் தவிர்த்து விட்டு தனியே செல்கிறார் ஐஸ்வர்யா ராய். தம்பதிக்குள் பிரிவு அதிகமாகி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் அமிதாப் பச்சன் கவலையில் உள்ளாராம்.

சமீபத்தில் வெளியான ஒரு படத்தை வைத்து நர்கீஸ் ஃபக்ரி கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டனர். கோபம் அடைந்த நர்கீஸ், நான் கர்ப்பமாக இல்லை. இதுபோல் எல்லாம் ஒரு பெண்ணை இழிவுபடுத்த எப்படித்தான் மனசு வருதோ என பொறிந்து தள்ளியிருந்தார்.

பிசினஸ்மேன் ஒருவரை தீவிரமாகக் காதலித்து வந்தார் நேஹா தூபியா. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திடீரென திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாராம் அந்த பிசினஸ்மேன். இதனால் தீவிர மதுவுக்கு அடிமையாகி இருக்கிறாராம் நேஹா.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, பார்ட்டி பறவை. அவரை படத்தில் அறிமுகப்படுத்துவதால் பார்ட்டிகளுக்குச் செல்ல டைரக்டர் கம் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தடை போட்டார். இதனால் அவரது படமே வேண்டாம் என உதறிவிட்டிருக்கிறாராம் ஜான்வி.

- ஜியா