வர்லாம் வா!சரோஜாதேவி பதில்கள்

* பெண்களை நினைத்தாலே இனிக்கிறது. தொட்டால்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும்.

* கண்ணாடி அணியும் பெண்கள் காதலிக்க மறுப்பதேன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
புது கம்ப்ளைண்டாக இருக்கிறதே! விசாரிப்போம்.

* கண்ணடிப்பது, சைட்டடிப்பது - எதில் கிக் அதிகம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சின்னப்புள்ளையா இருக்கீங்களே! கிக்கு ஏத்திக்க வேற வேற சமாச்சாரங்கள் இருக்கு.

* ஆண்களும் பலாத்காரத்துக்கு உள்ளாகிறார்களே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பாவம். வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்கள் போலிருக்கு.

* வளையோசையின் மகத்துவம் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
‘வர்லாம்... வர்லாம்... வா!’ என்று க்ரீன் சிக்னல் கொடுக்க பயன்படுகிறது.