காதலன் கிளுகிளுப்பு! காதலி கடுகடுப்பு!!குழந்தை பெற்றால் அழகு போய்விடும் என்பதால்தான் குழந்தையை தத்தெடுத்துள்ளார் என சன்னி லியோனை தாக்கிப் பேசியுள்ளார் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே.தன் காதலன் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலைன் பெர்னாண்டசுடன் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருப்பதால் ‘எ ஜென்டில்மேன்’ படத்தை பார்க்க மாட்டேன் என தடாலடியாக சொல்லி இருக்கிறார் அலியா பட்.

வரலாற்றுப் படமான ‘ராணி பத்மாவதி’யில் நடித்து வரும் தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் வருகிறதாம். இதனால் அவரது குடும்பத்தார் பீதியில் உள்ளனர். என்ன ஆனாலும் படத்திலிருந்து விலக மாட்டேன் என்கிறார் தீபிகா.

கேத்ரினா கைப் தனது தங்கை மெலிசாவை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறார். மாஜி காதலன் ரன்பீர் கபூர், மெலிசாவை தனது அலுவலகத்துக்கு ஆடிஷனுக்கு அனுப்பும்படியும் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் சொன்னாராம். ரன்பீரைப் பற்றித் தெரிந்த கேத்ரினா, அதற்கு மறுத்துவிட்டாராம்.

- ஜியா