நட்சத்திர செல்லங்கள்!ஸ்டார் செல்லம்

எப்போதும் ஷூட்டிங் விளக்குகளின் சூட்டில், ஃபுல் மேக்கப்பில், நாள் முழுக்க வெயில் மழை பாராமல் வேலை பார்க்கும் நம்முடைய நட்சத்திரங்களுக்கு பெரிய ஆறுதலே அவர்கள் வளர்க்கும் pet animals தான். அதிலும் நாயோ, பூனையோ வளர்க்காத நடிகைகள் இருந்தால் அதிசயம்தான்.செல்லப் பிராணிகள் மீது சினிமா நட்சத்திரங்களுக்கு ஏன் இவ்வளவு அன்பு?

ஒரு நீண்ட ஆய்வுக்குரிய கேள்வி இது. போலியாக அன்பும், மரியாதையும் நிறைந்திருக்கும் இடம் சினிமா உலகம். ஒவ்வொரு நட்சத்திரமுமே நிஜமான அன்பை தம் வாழ்நாள் முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களிடம் நடிக்கத் தெரியாமல் நிஜமாகப் பழகுவது விலங்குகள்தான் என்று நம்புகிறார்கள். ஒரு நாய் தம் மீது அன்பு செலுத்த தமக்கு மார்க்கெட் இருக்கிறதா, நடித்த லேட்டஸ்ட் படம் ஹிட்டா என்பதெல்லாம் பொருட்டே இல்லைதானே?

நாலு கோடி சம்பளம் வாங்குகிற ஹீரோயினாக இருந்தாலும் சரி, வரிசையாக நாலு படம் ஃப்ளாப் கொடுத்த ஹீரோவாக இருந்தாலும் சரி, அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பை மட்டுமே கொட்டத் தெரிந்த வாயில்லா ஜீவன்கள் மீது அவர்களுக்கும் அன்பு பெருகுவதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

நம்முடைய நட்சத்திரங்கள், தம்முடைய அன்பை யார் யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிற டீடெயில்ட் ரிப்போர்ட்டை ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்காக எக்ஸ்க்ளூஸிவ்வாக வழங்குகிறோம்.

இலியானாவின் கோவா வீட்டில் ஒரு டஜன் பூனைக்குட்டிகள் இருக்கின்றன. Blueவும் trukeyயும்தான் இடுப்பழகி இலியானாவுக்கு ரொம்பவும் குளோஸ்.

பத்து வருடங்களுக்கு மேலாக அமிதாப்பின் அன்பை சம்பாதித்து வைத்திருக்கிறது அவரது dane shanouk. கோபத்துக்கு பேர் போன அமிதாப், தன் செல்லக்குட்டியின் முன்பாக குழைந்துவிடுவாராம்.

ஹாலிவுட் ஷூட்டிங்கில் இருந்தாலும் மும்பையில் இருக்கும் brandoவிடம் ஸ்கைப்பிலேயாவது கொஞ்சிவிடுகிறார் ப்ரியங்கா சோப்ரா.

‘பாகுபலி’ தேவசேனாவுக்கு நிறைய நாய்க்குட்டிகள் வளர்க்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், தினம் ஒரு ஸ்டேட்டில் ஷூட்டிங்குக்கு பறந்துகொண்டிருப்பதால் எந்த petsம் வளர்க்கவில்லை.

நமீதாவின் செல்லக்குட்டிகளைப் பற்றி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் அவரே சொல்லிவிட்டார். சில வருடங்களாகவே ‘சாக்லெட்’ வளர்த்து வந்தவர், இப்போது ‘கேரமல்’ வளர்க்கிறார்.

அமலாபாலின் அன்பு முத்தங்கள் எல்லாம் mynooவிற்குத்தான் கிடைக்கிறது.

பாலிவுட் பப்ளி பொண்ணு சோனாக்‌ஷி சின்ஹாவின் வீட்டில் புதுவரவு kuro.

Bablo தான் எமி ஜாக்சனின் அத்தனை லூட்டிகளுக்கும் பார்ட்னர். பாக்ஸர் இன நாய்க்குட்டி. எமியின் லண்டன் வீட்டில் பாப்லோதான் ஆல் இன் ஆல் அழகுராஜாவாம்.

ராய்லட்சுமிக்கு மும்பையில் கிடைத்த சூப்பர் கிஃப்ட் cooper.

ஸ்பெயினுக்கு ஷூட்டிங் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் பாலிவுட் பேரழகி அனுஷ்கா சர்மாவுக்கு கொடுத்த க்யூட் கிஃப்ட் dude.

நிக்கி கல்ராணியின் ஃபேமிலிக்கே ஃபேவரிட் junior. பெங்களூர் சில் க்ளைமேட்டை ரசித்துக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கில் சின்ன கேப் கிடைத்தாலும் ஜூனியரைப் பார்க்க பெங்களூருக்கு பறந்துவிடுகிறார் நிக்கி.

சென்னை போட்கிளப் வீட்டில் இருந்து மாதவனுடன் கொஞ்சிய ‘சிம்பா’ இப்போது மும்பையில் கொஞ்சிக்கொண்டிருக்கிறான்.

பார்க்க முரடனாக இருந்தாலும் ரொம்பவே சாஃப்ட் வாலு jackதான் பார்வதி நாயரின் செல்லம்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் தாவூ தீர்ந்துகொண்டிருக்கும் விஷாலுக்கு ஆறுதல் romeo. டென்ஷன் அத்தனையையும் போக்கும் வல்லமை ரோமியோவுக்கு உண்டாம்.

Pebbles தமன்னாவின் மனதில் இடம் பிடித்து 3 வருடங்கள் ஓடிவிட்டன.

ஸ்ருதிஹாசன், ஆசையாய் அள்ளி அணைத்துக் கொண்டிருப்பது ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்த கெஸ்ட். ஆனால் மும்பை வீட்டில் இருப்பவர் shitzu.

மும்பை வீட்டில் ஹன்சிக்காக எப்போதும் வெயிட் பண்ணும் ஜீவன், bruzo. சில ஆண்டுகளுக்கு முன்புதான் ‘சார்’ ஹன்சியின் மனதில் இடம் பிடித்தார்.

ப்ரியாஆனந்த், ஷாப்பிங் போனாலும், வாக்கிங் போனாலும் ப்ரியாவின் கூடவே வரும் யோகம், bumblebeeக்கு மட்டுமே உண்டு.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா மாதிரிதான் த்ரிஷா. செல்ஃபி எடுப்பது, பர்த் டே செலிபரேட் பண்ணுவது எல்லாமே நாய்க்குட்டிகளோடு தான். இப்போதைய ஃபேவரிட், teddy.

‘‘நாய்க்குட்டிகள்னா வாக்கிங் அழைச்சிட்டு போகணும்.... அதை குளிப்பாட்டணும்....னு ரிஸ்க் ஜாஸ்தி.. ஆனா, பூனைக்குட்டி ச்சோ ஸ்வீட்..’’ இது லேகாவாஷிங்டனின் பாலிஸி. மடியில் கொஞ்சும் பூனையின் பெயர் swami.

தொகுப்பு : மை.பாரதிராஜா