ஜிங்கினமணி



ஆடி ஸ்பெஷல் அயிட்டம்

பெயர் : ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன்
ஹிட் அயிட்டம் : ‘ஜில்லா’ ஜிங்கினமணி!

“இந்தப் பொண்ணு ரொம்ப நல்லா தெரிஞ்ச பொண்ணா இருக்கே!’’ என நீங்கள் யூகிப்பது சரிதான். விஜய்யின் ‘ஜில்லா’ ஜிங்கினமணியாக சிணுங்கின பொண்ணு இந்த ஸ்கார்லட். ‘பாகுபலி’யின் மனோகரி பாடலில் நோராவுடன் ஜோரா ஆட்டம் போட்டிருப்பவர். எல்லா woodலேயும் ‘அயிட்டம் டான்ஸா..... கூப்பிடுங்க ஸ்கார்லட்டை’ என பாலிஸியாகவே வைத்திருப்பார்கள் போல. ‘‘ஐயம் ஏ லண்டன் கேர்ள். நான் ballet, jazz டான்ஸர். அதனால நடிப்பை விட, டான்ஸில் ஆர்வம் வந்திடுச்சு.

பாலிவுட்ல தான் அறிமுகமானேன். தெலுங்கு, கன்னடப் படங்கள் பார்த்து தமிழ்ல ‘சமர்’ படத்தில் ஐட்டம் ஸாங் ஆடினேன். ‘ஜில்லா’வில் ‘ஜிங்கினமணி.. ’ பெரிய ஹிட். ‘பாகுபலி’யில் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. ‘நோரா’, ‘ஸ்னேகா’வும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.... மாடலிங்ல இருந்து சினிமாவிற்கு என்ட்ரி ஆனதால இந்தத் துறை பிடிச்சிருக்கு’’ எனச் சொல்லும் ஸ்கார்லெட் இப்போது கார்த்தியின் ‘தீரன்’ படத்திலும் ஆடியிருக்கிறார்.