கைகள் பரபரத்தன...



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்துக்கு நீங்க எழுதியிருக்கும் விமர்சனத்தை வாசித்து வேலுபிரபாகரனே வெட்கப்பட்டிருப்பார். அவ்வளவு குஜாலா இருந்தது தலை.
- ராம்ஜி, பெரம்பூர்.

‘காதலிக்க நேரமில்லை’ நடித்த ரவிச்சந்திரனுடைய பேத்திக்கே காதலிக்க நேரமில்லை என்பது நம்பகத்துக்குரியதாக இல்லை.  உங்க எகனை மொகனை கேள்விகளுக்கு நச்சென்று பதிலளித்து தன்னுடைய சினிமா பரம்பரையின் பெருமையை காப்பாற்றிவிட்டார் தான்யா.
- ரமேஷ், நாமக்கல்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா ஹீரோயின், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் வில்லன் என்று எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவிடுகிறார் ‘டிமாண்டி காலனி’ அஜய் ஞானமுத்து.
- சங்கர், கலிங்கப்பட்டி.

சரோஜாவின் கவிதை மழையில் நனைந்தோம். அவ்வப்போது இதுமாதிரி கவிதை எழுதி காமிக்குமாறு சரோஜாக்காவை கேட்டுக் கொள்கிறோம்.
- திலீபன், தூக்கநாயக்கன்பாளையம்.

நடுப்பக்க பரந்த மைதானத்தை பார்த்ததுமே, விளையாடியே ஆகவேண்டும் என்று கைகள் பரபரத்தன. ஆனா, பார்த்து விளையாடணும் என்கிற உங்கள் எச்சரிக்கையைப் பார்த்து கட்டுப்படுத்திக் கொண்டோம்.
- ராஜசேகரன், வண்டலூர்.

வேலுபிரபாகரனின் குமுறல் எல்லாம் நியாயம்தான். ஆனாலும், சினிமாவில் இப்படியா எல்லாத்தையும் தொறந்து காட்டணும்?
- கே.எஸ்.ரஹமதுல்லா, கோவை-2.
(சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம் தொடர், அடுத்தவாரம் வழக்கம்போல வெளிவரும்).