கருப்புக்கும், சிவப்புக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகுமா?



ஜாலி பேட்டி with விஜய் சேதுபதி & திரிஷா!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் ‘96’ படத்தில் விஜய் சேதுபதியும், திரிஷாவும் இணைந்து நடிக்கிறார்கள். சி.பி.பிரேம்குமார் இயக்குகிறார். ஒருவரைப் பற்றி இன்ெனாருவரிடம் கேட்டபோது....

முதலில் திரிஷாவிடம் பேசினோம்.

“விஜய்யுடன் நடித்த நீங்கள் விஜய்சேதுபதியுடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“விஜய்யுடன் நான் நடித்தபோது கமர்ஷியல் ஹீரோயின், விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இந்தக் காலம் நான் பெர்ஃபாமன்ஸ் ஹீரோயின். அப்போது கத்துக்கிட்டிருந்தேன். இப்போ கத்துக்கிட்டதை யூஸ் பண்றேன். 96 கதையை இயக்குனர் சொன்ன உடனேயே அதில் விஜய் சேதுபதி கேரக்டரை நினைத்துப் பார்த்தேன். அப்போதே இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகிவிட்டது.”

“விஜய்யா? விஜய் சேதுபதியா? யார் பெஸ்ட்?”
“இருவரையும் கம்பேர் பண்ணக்கூடாது. அவர் வழி தனி, இவர் வழி தனி. ஆனால் அவுங்கவுங்க வழியில அவுங்கவுங்க ஜெயிச்சிக்கிட்டே போறாங்க.”
“விஜய் சேதுபதியோட எந்த படம் உங்களுக்கு பிடிக்கும்?”

“அவரோட எல்லா படத்தையும் பார்்த்திருக்கேன். பிடிச்சது ‘நானும் ரவுடிதான்’. நாம நடிச்சிருக்கலாமேன்னு நினைக்கிற படங்கள்ல அதுவும் ஒண்ணு. ‘சூது கவ்வும்’ படத்தை பலமுறை பார்த்திருக்கேன். என்னா ஒரு பெர்ஃபாமன்ஸ்?”
“விஜய் சேதுபதி கருப்பு, நீங்க சிவப்பு. எப்படி மேட்ச் ஆகும்?”

“அந்த மேஜிக்தான் படம். கதையை இப்பவே சொல்ல முடியுமா?”
“விஜய் சேதுபதி பற்றி உங்க அபிப்ராயம்?”
“ரொம்ப சிம்பிளா இருக்கார். தொழில் மேல பக்தியா இருக்கார். தான் வந்த பாதையை மறக்காம இருக்கார். இமேஜ் பற்றி கவலைப்படாதவராக இருக்கார். சுயம்புவா ஜெயிச்சவர்.”

அடுத்து, திரிஷா பற்றி விஜய் சேதுபதியிடம் பேசினோம்.

“திரிஷா பற்றி என்ன நினைக்கிறீங்க?”
“அண்ணே நான் அவுங்களோட பெரிய ஃபேன். சான்ஸ் தேடிக்கிட்டிருக்கிற காலத்துலேயும் சரி, அதுக்கு முன்னாலேயும சரி, நான் பெரிய ரசிகன். வாயைத் திறக்காமலே சிரிப்பாங்களே அந்த அழகே தனிதான் பாஸ். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ எத்தனை முறை பார்த்திருக்கிறேன் தெரியுமா?”“இப்போது அவர்களுடன் நடிப்பதை எப்படி ஃபீ்ல் பண்றீங்க?”

“இயக்குநர் கதை சொன்னதும் பிடிச்சுப்போச்சு. ஹீரோயின் யாருன்னு கேட்டேன். திரிஷான்னாங்க. அப்படியே ஷாக் ஆயிட்டேன். கிண்டல் பண்ணாதீங்க பாஸ்ன்னு சொன்னேன். இல்லை, உண்மைதான்னு சொன்னார்். நான்தான் ஹீரோன்னு சொன்னீங்களான்னு கேட்டேன்.

நீங்கதான் ஹீரோன்னு சொன்னதாலதான் ஒத்துக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. ஐ எம் வெரி லக்கி பாய்.”“நீங்க நடிப்புல டாக்டரேட் வாங்கினவங்க. அவுங்க கமர்ஷியல் ஹீரோயினா இருந்து இப்பதான் மாறிக்கிட்டிருக்காங்க. எப்படி மேனேஜ் பண்ணப்போறீங்க?”

“பாஸ் நீங்க சொல்றத நான் ஏத்துக்கமாட்டேன். ‘அபியும் நானும்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களைப் பாருங்க. பெர்ஃபாமன்சுல பின்னியிருப்பாங்க.”“ஒரு காலத்துல உங்களுக்கு கனவுக்கன்னியா இருந்தவக.

அவுங்களோட நடிக்கிறப்போ வெட்கமா இருக்காதா?”
“பாஸ், கற்பனையிலேயே எத்தனை முறை அவுங்களோட டூயட் பாடியிருப்பேன். இப்போ நிஜத்துல அந்த வாய்ப்பு..... விட்டுருவேனா. அதோட எனக்கு ரொமான்ஸ் சீன்ல நடிக்க ரொம்ப புடிக்கும். படம் வர்றவரைக்கும் வெயிட் பண்ணுங்க பாஸ்.”

“35 வயதிலும் ஹீேராயினா நடிக்கும் திரிஷா பற்றி உங்க அபிப்ராயம்?”
“தயவுசெய்து இனி அவுங்க வயதை மென்ஷன் பண்ணாதீங்க. அப்ப பார்த்த மாதிரியே இப்பவும் இருக்காங்க. தனக்குன்னு ஒரு ரசிகர்களை தக்கவச்சுக்கிட்டு இத்தனை வருஷம் ஃபீல்டுல ஹீரோயினாவே நிக்குறது ரொம்ப கஷ்டம். திரிஷா நிக்கிறாங்கன்னா அது அவுங்களோட டெடிகேஷன்.”

- மீரான்