பீச்சாங்கை



பிக்பாக்கெட்டின் கதை!

நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் தொழிற்முறை பிக்பாக்கெட். ஒரு முறை போலீசிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் சிக்கிக்கொள்கிறார். அந்த சம்பவத்துக்குப் பிறகு ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்படுகிறார்.

அதன் பிறகு அவர் செய்ய நினைக்கும் விஷயத்தை அவருடைய இடது கை செய்ய மறுக்கிறது. ஒரு கை செயல் இழந்த நிலையிலும் அவரைத் தேடி ஒரு பெரிய பிசினஸ் ஆஃபர் வருகிறது. அதை செய்து முடித்தாரா இல்லையா என்பதே படம்.

கார்த்திக் முதல் படத்திலேயே அசத்தலான கதாபாத்திரத்தை தேர்வு செய்திருக்கிறார். முகமும், பீச்சாங்கையும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் மெனக்கெட்டு சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் காதலியாக வரும் அஞ்சலி ராவுக்கு சொல்லும்படியான கேரக்டர் அமையவில்லை. எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு தரப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு பிக்பாக்கெட்டின் கதையாக நேரடியாக சொல்லாமல் திரைக்கதை பல கிளைகளாக  நகர்வது படத்துக்கு பெரிய பின்னடைவு. அறிமுக இயக்குனர் அசோக்,  டிரைலர், டீசரில் காட்டிய உழைப்பை கொஞ்சம் திரைக்கதைக்கும் கொடுத்திருக்கலாம்.