பாகுபலியை மிஞ்சுமா சங்கமித்ரா?



‘பாகுபலி’யின் ஆயிரம் கோடி வெற்றியைத் தாண்ட அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. தேனாண்டாள் பிலிம்ஸ் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’வும் ‘பாகுபலி’யைப் போலவே இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

படத்தின் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தான் இழந்துவிட்ட அரசை பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இளவரசி திரும்பப் பெறுவதுதான் கதையாம். பிரும்மாண்டமான போர்க்காட்சிகள் நிறைந்திருக்கிறதாம்.

ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.‘மேட்டுக்குடி’ படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ஒரு போரை சித்தரித்திருப்பார் சுந்தர்.சி. முழுமையான ஒரு சரித்திரப் படத்தை எடுக்க வேண்டும் என்பது அவரது நீண்டகாலக் கனவு. அந்தக் கனவு ‘சங்கமித்ரா’ மூலமாக நிறைவேறுகிறது.துல்லியமான கிராஃபிக்ஸ், பிரும்மாண்டமான செட்டுகள் என்று ‘பாகுபலி’யை மிஞ்சுவோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் படக்குழுவினர்.

- யுவா