ஊழியர்களின் காவலன்!



தன்னுடைய வீட்டில் பணியாற்றும் பன்னிரெண்டு ஊழியர்களுக்கும் கேளம்பாக்கம் அருகே வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் அஜீத்குமார். அந்த வீட்டை அவரவர் பெயருக்கே பத்திரப் பதிவும் செய்துகொடுத்திருக்கிறார். அங்கிருந்து அவர்கள் தன் வீட்டுக்கு வருவதற்காக தனி வேன் ஒன்றும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஊழியர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு எல்.ஐ.சி. மற்றும் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசிகளும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஊழியர்களின் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டுவார். காசு, பணம் பற்றி கவலைப்படாமல் அவர்களது கல்விக்கு செலவும் செய்வார். ஆனால், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 80% மதிப்பெண்ணாவது பெறவேண்டும், மதிப்பெண் மூலமாகவே கல்லூரியில் சீட்டு பெறவேண்டும். தன்னுடைய செல்வாக்கை சீட்டு வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என்று கறாராகவும் இருக்கிறார்.

- தேவ்