பட்டமும் வேண்டாம், பதவியும் வேண்டாம்!
ரசிகர்கள் அஜீத்தை ‘தல’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அவரோ ரசிகர்களையும், நண்பர்களையும் ‘ஜி’ என்றோ, ‘பாஸ்’ என்றோ அழைப்பார். ‘காதல் கோட்டை’ திரைப்படத்தில் அவருக்கு டைட்டிலில் ‘ஆணழகன்’ பட்டம் கொடுத்தார்கள். சில இயக்குநர்கள் ‘காதல் மன்னன்’ என்று அவர் நடித்த படத்தின் டைட்டிலையே இவருக்கும் கொடுத்தார்கள்.
ஆனால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் கொடுத்த பட்டம் ‘அல்டிமேட் ஸ்டார்’. இது ‘சிட்டிஸன்’ படத்தின் டைட்டிலில் இருந்து தொடர்ச்சியாக அஜீத் படத்தின் டைட்டில்களில் இடம்பெற்று வந்தது. இனிமேல் டைட்டில்களில் எனக்கு பட்டம் போடாதீர்கள் என்று அஜீத் அன்போடு மறுத்து வருகிறார். பட்டங்களிலோ, பதவிகளிலோ அவருக்கு எந்த விருப்பமும் இல்லை.
- தேவராஜ்
|