கூத்துப்பட்டறையின் துணிகர திரில்லர்!



பாலசுதன் தயாரித்து இயக்கி வரும்  படம் ‘துணிகரம்’ வினோத் லோகிதாசன், பரணி மற்றும்  செம்மலர் அன்னம் ஆகியோரது நடிப்பில் இந்தப்படம்  உருவாகி வருகிறது. இவர்கள் அனைவரும் கூத்துப்  பட்டறையில் பயிற்சி பெற்ற திரைக்கலைஞர்கள். 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆடிஷன் வைத்து இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் பாலசுதன்.

ஒவ்வொரு காட்சிக்கும் ஒத்திகை பார்த்தபிறகே ஒளிப்பதிவு செய்ததால், திட்டமிட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். திருப்பூர், பல்லடம், காப்புக்காடு ஆகிய இடங்களில்  படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஒரே  நாளில் நடக்கும் மூன்று சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்ட திரில்லர் கதை இது.  ஒளிப்பதிவாளர் மதியின் உதவியாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  இசையமைப்பாளராக   ஷான் கோகுல்  பொறுப்பேற்றுள்ளார்.  பின்னணி இசையை   தனுஜ் மேனன்  அமைக்கிறார்.திருப்பூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்த மக்கள், படக்குழுவுக்கு பனியன் மற்றும் உள்ளாடைகளைப் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

- நெல்பா