நாங்களா உங்களை வற்புறுத்தறோம்?



சிருஷ்டி டாங்கே ஆவேசம்!

துறுதுறு கண்கள். புசுபுசு கன்னம். சிரித்தால் கன்னத்தில் அழகாக விழும் குழி. மாடர்ன் டிரெஸ், தாவணி என எந்த காஸ்ட்யூம் போட்டாலும் எடுப்பாக வெளிப்படும்  சிருஷ்டி டாங்கே, தமிழ் இளைஞர்களை மயக்கி வைத்திருக்கிறார்.

“முப்பரிமாணம் பார்த்தீங்களா?” என்று ஆர்வத்தோடு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பியவருக்கு, “ஹாய் ஸ்கூல் பொண்ணு.. ரெண்டு நிமிஷம் பேசலாமா?” என்று கண்ணடிக்கும் ஸ்மைலியோடு ரிப்ளை செய்தோம். “கமான் டியர்” என்று உடனடியாக பதில் வந்தது.

“திடீர்னு ஸ்கூல் ஸ்டூடன்ட் கெட்டப்புலே எல்லாம் நடிச்சிருக்கீங்க?”

“ஒரு ஹீரோயினுக்கு ஸ்பெஷலே ரியல் ஏஜை குறைச்சி, டீனேஜ் பொண்ணா நடிக்கக்கூடிய சான்ஸ் கிடைக்கிறதுதானே? ரெட்டை ஜடை, ஸ்கூல் யூனிஃபார்ம்லே என்னை பார்த்தவங்கல்லாம் டரியல் ஆயிட்டாங்க!”“திடீர்னு உங்களைப் பத்தி நிறைய வதந்தி...”

“எப்படி பத்திக்கிச்சின்னே தெரியலை. என்னைப் பார்த்தா லவ் பண்ற மாதிரியா தெரியுது? என் கண்ணை நல்லா பாருங்க. அது பொய் சொல்லுமா? இப்போதைக்கு எனக்கு யார் மீதும் காதல் வரலை. கேரியர்லே பிஸியாக இருக்கிற நேரத்துலே லவ் பண்ண நேரம் சுத்தமா கிடையாது. உங்க மீடியாக்காரங்க வெறும் வாயை மெல்லுறதுலே கில்லாடிங்க.”
“பாவனா?”

“நடிகைகளுக்கு நேரம் சரியில்லை. வேறென்ன சொல்லுறது? சமீபமா அடிக்கடி ஏகத்துக்கும் சிக்கல். மக்களின் பொழுதுபோக்குக்கு எங்க நடிப்பு தீனி. அதைத்தாண்டி எங்களோட பர்சனல் விஷயங்கள் மேலே ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுறாங்கன்னு தெரியலை. நிறையப் பெண்கள் எதிர்கொள்கிற மோசமான விஷயத்தை பாவனா எதிர்கொண்டிருக்கிறார். அதை சட்டரீதியாக சந்தித்து போராடுகிறார். அவ்வளவுதான் மேட்டர்.”
“லைம்லைட்டில் இருக்கிறவங்கன்னா நாலு பேருக்கு கண்ணு உறுத்தத்தானே செய்யும்?”

“May be. ஆனா, எங்க நடிப்பைப் பேசுறதைவிட எங்களைப் பத்தி அதிகமா பேசுறது ஆரோக்கியமான சூழல் இல்லையே? எங்க படங்களை மார்ஃபிங் பண்ணி  இழிவுபடுத்தறதெல்லாம் இன்டர்நெட்டில் சகஜமாயிடிச்சி. இதைப் பார்க்குற யாருக்குமே இது தப்புன்னு தோணறதுல்லே. சாதாரண பொண்ணுன்னா ஒருவிதமாகவும், நடிகைன்னா வேறுவிதமாகவும் சமூகம் பார்க்குறது சரியான கோணமில்லையே?”

“நாங்க ஒரு ஷாம்பூ யூஸ் பண்ணணும்னாலும் நீங்களெல்லாம் நடிச்ச விளம்பரங்களைப் பார்த்துட்டுதான் செலக்ட் பண்ணுறோம். அப்படியிருக்க...”
“ஸ்டாப்.... ஸ்டாப்..... நாங்க விளம்பரத்திலேயோ, சினிமாவிலேயோ நடிப்பது சம்பளத்துக்காக. அது ஆக்டிங்குன்னு உங்களுக்கும் தெரியுமில்லையா? ஒவ்வொரு வீட்டுப்படியா ஏறிவந்து இந்த ஷாம்பூ தலைக்கு போட்டுக்கங்க, இந்த பவுடர் முகத்துக்கு அடிங்கன்னு யாராவது வற்புறுத்துறாங்களா என்ன? நாங்க ஒரு குறிப்பிட்ட புராடக்டுக்கு அம்பாஸிடர். அறிமுகப்படுத்துறோம். அதை பயன்படுத்துறதும், நிராகரிக்கிறதும் உங்களோட விருப்பம்.”
“இந்த கிசுகிசு, சர்ச்சைகள் எல்லாம் நடிகைகளின் வளர்ச்சிக்கும் பயன்படுதே?”

“நெகட்டிவ் பப்ளிசிட்டியும் ஒருவகை பப்ளிசிட்டிதான்னு சொல்லுறீங்க. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு அளவு இல்லையா? பாவனா பாதிக்கப்பட்டிருக்காங்க. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு குரல் கொடுப்பதுதான் மனிதம். ஆனா, என்ன நடக்குது? அவங்களைப் பத்தி ஏகத்துக்கும் கட்டுக்கதைகளை எழுதி, வாசிச்சி சந்தோஷப்படுறாங்க. நடிகைன்னாலே தப்பா பார்க்குறது தப்பு இல்லையா? நடிகைகளும் பொண்ணுதானே? அவங்களுக்கும் மனசு இருக்காதா?”

“அய்யோ. ரொம்ப சீரியஸா போவுது பேட்டி. ஜாலியா பேசுவோம். உங்க காஸ்ட்யூம்ஸ் சினிமாவில் மட்டுமல்ல, பப்ளிக்கிலும் பெருசா பேசப்படுது..”
“ஆமாம். என்னோட உடல்வாகுக்கு எந்த உடை செட் ஆகுதோ, அதை மட்டும்தான் போட்டுக்குவேன். இதுதான் சீக்ரட்!”
“திடீர்னு ஒல்லி பெல்லி மோடுக்கு மாறிட்டீங்க?”

“பிரெஞ்சு ராணி யாருக்கோ பதினாலு இஞ்சுதான் இடுப்பு. அது அந்தக் காலத்திலே ஐரோப்பாவில் ஃபேஷன்னு சொல்லுவாங்க. எனக்கு அப்படியெல்லாம் எலும்புக்கூடு ரேஞ்சுக்கு ஒல்லியாவதில் உடன்பாடு இல்லை. ‘முப்பரிமாணம்’ படத்தில் ஸ்கூல் படிக்கிற டீனேஜ் பொண்ணுன்னு கேரக்டர். அதுக்காக உடம்பைக் குறைச்சேன். என்னோட ஸ்பெஷல் எப்பவுமே பப்ளியான தோற்றம்தான். அதை நான் மிஸ் பண்ண விரும்பலை.”
“நெக்ஸ்ட்?”

“உதயநிதி சாரோட ‘சரவணன் இருக்க பயமேன்’ பண்றேன். அப்புறம் ‘காலக்கூத்து’, ‘பொட்டு’, ‘ஒரு நொடியில்’, ‘சத்ரு’ன்னு நிறைய படங்கள். மலையாளத்துலே ‘1971 : பியாண்ட் பார்டர்ஸ்’னு மோகன்லால் படம் மூலமா அறிமுகமாகிறேன். இந்த வருஷம் எனக்கு ஸ்பெஷலா போய்க்கிட்டிருக்கு. சந்தோஷமா இருக்கேன்.”

- ஷாலினி நியூட்டன்