மடிப்பு இல்லையே?



சரோஜாதேவி பதில்கள்

* அங்கங்களை ஆங்காங்கே காட்டி ஆடவர்களை மயக்குவதா அழகு?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மனித  இனத்தைத் தவிர வேறெந்த உயிரினத்துக்கும் ஆடையில்லை. ஆண் விலங்குகள் எல்லாம்  பெண் விலங்குகளைப் பார்த்து எப்போதும் மயங்கியே திரிகிறதா என்ன?  மயங்குறதுக்கு உங்களுக்கு இதெல்லாம் ஒரு சாக்கு சார்.

* முன்பு ‘மடிப்பு’ அம்சாவுக்கு இருந்ததைப்போல, இப்போதைய நடிகைகளுக்கு எடுப்பான மடிப்பு இல்லையே?
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.
ட்ரெண்டு மாறிவிட்டது சார். இப்போதெல்லாம் க்ளீனாக இஸ்திரி செய்தது மாதிரி ஃப்ளாட்டான இடுப்பைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

* உலக அதிசயங்களில் உங்களுக்கு பிடித்தது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்தான். ஏனென்று விலாவாரியா விளக்கணுமோ?

* கன்னத்தை ஆப்பிளுக்கு ஒப்பிடுவது ஏன்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இதுக்கு பதில் சொன்னால் அப்புறம் கழுத்துக்கு இறங்குவீங்க.
சத்யா, வர வர ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க.

* என் பக்கத்து வீட்டுக்காரர்தான் அவர் மனைவியின் துணிகளை துவைக்கிறார். நானும் துவைக்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
அதுலே ஒரு கிக்கு இருக்கும் சார். ட்ரை பண்ணிப் பாருங்க.