சசிகலா வாழ்க்கை படமாகிறது



ராஜஸ்தானில் ‘பத்மாவதி’ ஷூட்டிங்கில் டைரக்டர் சஞ்சய்லீலா பன்சாலி மதவெறியர்களால் தாக்கப்பட்டார். அங்கு போட்ட செட்டுகளை இப்போது மும்பையில் போட்டு பலத்த பாதுகாப்போடு படமாக்கி வருகிறார்.விவேக் ஓபராயின் பர்த்டே பார்ட்டிக்கு வந்த இஷாகுப்தா ஓவர் போதையில் சத்தம் போட்டு ரகளை செய்திருக்கிறார். மட்டையாகி விட்ட அவரை தனது உதவியாளரின் உதவியோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம் இளம் ஹீரோ இம்ரான்ஹாஷ்மி.

சமீபத்தில் ஒரு பார்ட்டியில் சந்தித்த எமி ஜாக்சனை டேட்டிங்கிற்கு அழைத்திருக்கிறார் ரன்பீர் கபூர். பிஸியென்று சொல்லி எஸ் ஆகிவிட்டாராம் எமி. சல்மானுக்கு ‘ஓக்கே’, எனக்கு ‘நோ’வா என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ரன்பீர்.சசிகலாவைப் பற்றிய பல ரகசியங்கள் எனக்குத் தெரியும். அவரது வாழ்க்கையை நிச்சயமாக படமாக எடுப்பேன் என்றுகூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

‘ரங்கூன்’ படத்தில் படுசூடாக ஷாஹித் கபூருடன் நடித்திருக்கிறார் கங்கனா ரணாவத். மேலாடையின்றி நடித்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை டெம்ப்ட் செய்துவருகிறார்.

- ஜியா