ஹீரோவாக மம்மூட்டியின் தம்பி மகன்!



மலையாளத்தில் பல படங்கள் தயாரித்த மரிகர் ஆர்ட்ஸ், தமிழில் முதல்முறையாகப் படம் தயாரிக்கிறது. ஹாஷிம் மரிகர் இயக்குகிறார். மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் தம்பி மகன் மக்பூல் சல்மான் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் சர்ச்சை ஏற்படுத்திய ‘ஹேட் ஸ்டோரி’ படத்தில் நடித்த பவுலி டாம், கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா, சாக்‌ஷி திவேதி ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.“என் பெரியப்பா மம்மூட்டி மற்றும் அண்ணன் துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவை மறக்க முடியாது. அதுபோல், அனைத்து ரசிகர்களும் எனக்கும் ஆதரவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் மக்பூல்.

- தேவா