சிரிக்க விடலாமா?



‘வேதாளம்’ படத்தில் அஜீத்குமார் பேசும் பவர்ஃபுல்லான பஞ்ச் டயலாக், ‘தெறிக்க விடலாமா?’இந்த டயலாக்கை அப்படியே உல்டா செய்து ‘சிரிக்க விடலாமா’ என்று டைட்டில் வைத்து ஒரு காமெடிப் படம் எடுத்திருக்கிறார்கள்.

நிதின் சத்யா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் தயாராகும் இப்படத்தை ஜெயக்குமார் தயாரித்து, பாடல்கள் எழுதி, இசையமைத்து பாடி நடிகராகவும் அறிமுகமாகிறார். பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய வி.பி.காவியன் இயக்குகிறார்.

- டீயார்