நிக்கியின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ அனுபவம் பெண்டு நிமிர்ந்திடிச்சி!



‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ என்கிற எம்.ஜி.ஆர் பாட்டின் ரீமிக்ஸை அமர்க்களமாக போட்டிருக்கிறார்கள் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வுக்கு. இதற்கு லாரன்ஸுடன் செம குத்து போட்டிருக்கும் நிக்கிகல்ராணிக்கு வாட்ஸப்பில் ‘வாவ்’ என்று ஹாட்டின் சிம்பல் போட்டு வாழ்த்து தெரிவித்திருந்தோம். ‘மீட் பண்ணலாமா?’ என்று பதில் அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் அவர் முன் நின்றோம்.

“சமீபமாக கரம் மசாலா படங்கள் பக்கமே உங்க காத்தடிக்குது?”

“ஆமாம். அப்படித்தான் அமையுது. தொடர்ச்சியா வெற்றிப் படங்களில் இருக்கிற ஹீரோயின் என்பதால் கேரியர் கிராப் ஏறிக்கிட்டே போவுது. எனக்கும் ரொம்ப பிடிச்சிதான் இருக்கு. லைஃப் ஒருமாதிரி கலர்ஃபுல்லா, ஜாலியா, செம ஸ்பெஷலா போயிக்கிட்டிருக்கு.”
“அதென்னங்க ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ன்னு தரை லோக்கல் டைட்டில்? பொதுவாவே நீங்க நடிக்கிற படங்களோட டைட்டிலெல்லாம் இப்படித்தான் இருக்கு?”

“படம் செம கமர்ஷியல் கொலைக்குத்து. ஃபேமிலியோடு பார்த்து ரசிக்கிற வகையில் ரொம்ப ஜனரஞ்சகமா வந்திருக்கு. தெலுங்கில் ‘பட்டாஸ்’னு வெளிவந்து செமத்தியா ஹிட்டடிச்ச படத்தோட தமிழ் ரீமேக். நான் தெலுங்குப் படத்தை பார்த்துட்டுதான் இதை ஒத்துக்கிட்டேன். இந்தப் படத்துலே நானும் இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“படத்துலே உங்க கேரக்டர்?”

“உங்களை மாதிரியே ஜர்னலிஸ்டா வர்றேன். அதுக்குன்னு சீரியஸான ஜர்னலிஸ்ட்டுன்னு நெனைச்சுடாதீங்க. ‘வண்ணத்திரை’ ஜர்னலிஸ்ட்டு மாதிரி துறுதுறுன்னு ஜாலியான பத்திரிகைப் பொண்ணு. என்னோட கேரக்டரை பயங்கர ஸ்பெஷலா டிசைன் பண்ணியிருக்காரு டைரக்டர்.”
“உங்க காஸ்ட்யூம் எல்லாம் கண்ணைப் பறிக்குதே?”

“அடிப்படையில் நான் ஒரு ஃபேஷன் டிசைனர். இந்தப் படிப்பை படிச்சிருக்கேன். பேஷன் நாலெட்ஜ் இருக்கிறதாலே, எனக்கான காஸ்ட்யூம்ஸை தேர்ந்தெடுப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவேன். காஸ்ட்யூமரிடம், ‘அண்ணா, இந்த கலர் செலக்ட் பண்ணுங்க. இந்த டிசைன் சேருங்க’ன்னு சின்ன சின்ன சேஞ்ச் சொல்லுவேன். அதுக்குன்னு அவங்க வேலையிலே நான் தலையிடறதா அர்த்தமில்லை. எனக்கு இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு நான் சொல்லுற சஜ்ஜஷன்களை அவங்க சந்தோஷமா ஏத்துக்குறாங்க.”

“லாரன்ஸ் மாதிரி மாஸ்டர்களோடு டான்ஸ் பண்றப்போ கால் மூட்டு கழண்டுடுமே?”

“அய்யோ. அது பெரிய பிராப்ளம். ரொம்ப பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பாரு. பெண்டு நிமிர்ந்துடிச்சி. இதுக்கு முன்னாடியெல்லாம் நான் இவ்வளவு ஹெவியா டான்ஸ் பண்ணினதே இல்லை. ஆனா, செம எக்ஸ்பீரியன்ஸ். யூ-ட்யூப்புலே க்ளிப்பிங்ஸ் பார்த்தவங்க எல்லாம் பாராட்டித் தள்ளுறாங்க. நான் பயங்கர ஹேப்பியா இருக்கேன்.”

“ஜர்னலிஸ்டா நடிச்சிருக்கீங்க... அரசியலில் ஆர்வம் உண்டா?”

“நான் இப்போ சென்னையிலே வீடு வாங்கி செட்டில் ஆயிட்டேன். தமிழ்நாட்டு அரசியல் பயமுறுத்துது. வெள்ளம், முதல்வர் மரணம், வர்தா புயலில் தொடங்கி கொஞ்சநாள் முன்னாடி நடந்த அரசியல் குழப்பங்கள் வரை எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். தமிழ்நாட்டுலே நிலையான ஆட்சி அமைஞ்சு, மக்களுக்கு நல்லது நடக்கணும்னு டெய்லி ப்ரே பண்ணுறேன். நல்லவங்க வாழுற மாநிலம் இது. நிச்சயமா நல்லதே நடக்கும்.”

“அடுத்தடுத்த படங்கள்?”

“இப்போ ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வந்திருக்கு. அப்புறம் ஆதியோட ‘மரகத நாணயம்’, ஜீவாவோட ‘கீ’, விக்ரம் பிரபுவோட ‘நெருப்புடா’, ‘பக்கா’, சாந்தோட ‘டீம்-5’-னு எல்லாப் படமுமே பளிச்சுன்னுதான் இருக்கு.”

“காதல்?”

“சமீபத்துலே காதலர்கள் ‘வேலண்டைன்ஸ் டே’ கொண்டாடுனாங்க. ஒவ்வொரு நாளுமே காதலர்களுக்கு ‘வேலண்டைன்ஸ் டே’வாதான் இருக்கணும். வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நொடியும் அன்பை பகிர்ந்துக்கிட்டே இருக்குறதுதான் காதல்.”“சட்டுன்னு சொல்லுங்க.

உங்க காதலர் பேரென்ன?”

“ஹை... இப்படி போட்டு வாங்கினா சொல்லிடுவோமா? நான் காதலிக்கிறேனா இல்லையாங்கிறதே உங்களுக்கு சஸ்பென்ஸா இருக்கட்டும். அப்போதான் அப்பப்போ நாலு கிசுகிசுவாவது எழுதுவீங்க.”

- ஷாலினி நியூட்டன்