எறும்பு கடிக்குமே?



சரோஜாதேவி பதில்கள்

* அளவுக்கு மிஞ்சினால் ‘அதுவும்’ நஞ்சுதானே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இந்த விஷயத்துலே இறைக்கிற கிணறுதான் சுரக்கும் பாஸ்.

* புதுசா கல்யாணம் ஆனவங்க போகிற டூரை ஏன்
‘தேன் நிலவு’ என்கிறார்கள்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்
அவங்களுக்கு மட்டும் நிலவிலிருந்து தேன் சொட்டுமோ என்னவோ?

* பழங்களை அணில் மட்டும்தான் கடிக்குமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கடிக்கிறதுக்கு பழம் கிடைச்சா யார் வேணும்னாலும் கடிப்பாங்க சார்.

* காதலியின் இதழ்களை கரும்போடு ஒப்பிடலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
எறும்பு கடிக்குமே... பரவாயில்லையா?

* கண்ணுக்கு மை. உதட்டுக்கு சாயம். இதயத்துக்கு...?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். உள்ளாடை.