முதல்வராக நடிக்க மறுத்த ரஜினி!



திரைசரம்!

‘முதல்வன்’ படத்தின் கதையை ரஜினிக்காகத்தான் ஷங்கர் எழுதினார். இந்தக் கதையை கேட்ட ரஜினி, ‘ஒரு நாள் முதலமைச்சர்’ காட்சிகளில் தான் நடித்தால், அது அரசியல் பிரச்னைகளை எழுப்பலாம், அந்தக் காட்சிகளை மட்டும் மாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

ஆனால், படத்தில் அந்தக் காட்சிகள்தான் அடிப்படையே என்றுகூறி ஷங்கர் மாற்ற மறுத்துவிட்டார். அந்த வேடத்தில்தான் அர்ஜுன் நடித்து படம் பெரிய வெற்றியை பெற்றது.