விக்னேஷுக்கு பதில் விஜய்!
திரைசரம்!
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ‘தேவா’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானவர் விக்னேஷ். அவருக்கு ஜோடியாக ஐதராபாத்தைச் சேர்ந்த சுவாதி அறிமுகமானார். ஷூட்டிங் செல்லும் நாளில் எவ்வித காரணமும் சொல்லப்படாமல் விக்னேஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த வேடத்தில்தான் விஜய் நடித்தார்.
‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில், முதலில் கோவையைச் சேர்ந்த ஒரு புதுமுகம்தான் செகன்ட் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஓரிரு நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்த அவர், கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்று யாரிடமும் சொல்லாமல் வேறு படத்தில் நடிக்க போய்விட்டாராம். அந்த வேடத்தில் படத்தை இயக்கிய பாக்யராஜே நடித்தார்.
|