தமன்னாதான் வேணும்! அக்‌ஷய் அடம்



‘ஷாருக்கானின் மனைவி கவுரி, சரியான சந்தேகப் பேர்வழி’ என்று ஒரு பேட்டியில் மறைமுகமாக தாக்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ஷாருக்கை இவர் என்ன செய்தார், அவர் சந்தேகப்பட்டார் என்று தெரியாமல் மண்டை காய்கிறார்கள் மும்பை கிசுகிசு பத்திரிகையாளர்கள்.தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களோடு லிப் டூ லிப் கிஸ் காட்சி கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று இயக்குநர்களை வற்புறுத்துகிறாராம் ரன்பீர் கபூர்.

கரண்ஜோஹரோடு இணைந்து சல்மான்கான் படம் தயாரிக்கிறார். இதில் ஹீரோ அக்‌ஷய்குமார். எமிஜாக்சனை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்று சல்மானுக்கு விருப்பம். ஆனால்- அக்‌ஷயோ, தமன்னாவுக்குதான் வாய்ப்பு தரணும் என்று அடம் பிடிக்கிறாராம்.

தன்னை காதலித்து ஏமாற்றியதாக ஹிரித்திக் ரோஷன் மீது வழக்கு தொடுத்திருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி எப்போதும் நைட்கிளப்புகளே கதியென்று கிடப்பதாக பாலிவுட் சினிமாக்காரர்கள் வருத்தப்படுகிறார்கள்.

“உன்னை இந்தியில் நடிக்க வைக்கிறேன்” என்று நிக்கி கல்ராணிக்கு வலைவீசி இருக்கிறார் ராம்கோபால் வர்மா. “அவர் ஏடாகூடமான ஆளு. சிக்கிடாதே” என்று நிக்கிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள் வர்மாவின் மாஜி ஹீரோயின்கள்.

- ஜியா