சொப்பன சுந்தரிக்கு கல்யாணம்!



தமிழில் ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதற்குப் பிறகு சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பில் முத்திரை பதித்தார்.பின்னர் அவர் நடித்த ‘ஜன்னல் ஓரம்’, ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ போன்ற படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. டான்ஸ் மாஸ்டர் தினேஷுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘ஒரு குப்பை கதை’ வெளியாகவே இல்லை.

இதனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை சூடேற்றினார். ஜி.வி. பிரகாஷுடன் ரொம்ப ஹாட்டாக லிப்லாக் காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். படம் பெரிய வெற்றி பெற்றதால், அதே மாதிரி ‘அந்த மாதிரி’யே நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் வெளியான ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரியாக நடித்து, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிளுகிளுப்பேற்றினார்.

இதே மாதிரிதான் நடிக்க வேண்டுமென்றால் தன்னுடைய இமேஜ் ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆகிவிடும் என்று புரிந்துகொண்டவர், பெங்களூரில் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் நவீன உடை விற்கும் கடையை நடத்தத் தொடங்கிவிட்டார். மேற்கொண்டு சினிமாவில் நடிக்கலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்.

இதற்கிடையே, மனீஷாவுக்கு பெங்களூரில் காதலர் ஒருவர் இருப்பதாகவும் விரைவில் அவரை ரகசியமாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதை உறுதிப்படுத்திக் கொள்ள அவருடைய செல்போனை தொடர்பு கொண்டோம். Phone Switched off!

- தேவராஜ்