கழட்டமாட்டார் சோனியா!



திரைமலர் சரம்!

இசையமைப்பாளர் கே, நியூசிலாந்துக்கு போயிருந்தபோது 5000 ஆண்டுகள் பழமையான ஒரு மரத்தின் கட்டையில் இருந்து செதுக்கப்பட்ட நவீன டிசைன் ஒன்றை வாங்கி தன்னுடைய கழுத்தில் செயின் மாதிரி அணிந்திருக்கிறார்.

கட்டை விரல் தவிர்த்து எட்டு விரல்களிலும் மோதிரம் அணிவது சோனியா அகர்வாலின் வழக்கம். ஷூட்டிங்கின் போது மட்டும் கழட்டிவிடுவார். ஆனால், பாபா பக்தையான அவர் பாபா மோதிரத்தை மட்டும் எந்த சூழலிலும் கழட்டுவதில்லை.

தீவிர ஆன்மீக வாதியான ரஜினிகாந்துக்கு முன்பு மணிவண்ணன் ‘பெரியார் சிந்தனைகள்’ என்கிற நூலை பரிசளித்தார். அந்த நூலை தன் வீட்டு லைப்ரரியில் பத்திரமாக பாதுகாக்கும் ரஜினி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து வாசிக்கிறார். தன்னுடைய நடைமுறைக்கு சரிப்பட்டு வரும் பகுத்தறிவுக் கொள்கைகளை வாசித்து, நண்பர்களிடம் அதைப்பற்றி சொல்லி பெரியாரின் புகழ் பாடுகிறார்.

பிரியா ஆனந்தின் விரல் ரகசியம்!

பிரியா ஆனந்த் வித்தியாசமானவர். மற்றவர்கள் கைகளில் டாட்டூ குத்திக் கொண்டால், இவர் கைவிரல்களில் குத்திக் கொள்கிறார். அவரது விரல்களில் இருக்கும் இனிஷியல்கள் தாய், தந்தை பெயரின் முதல் எழுத்தாம்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இளையராஜாவின் பக்தர். தன்னுடைய ரெக்கார்டிங் தியேட்டரில் அவருடைய படத்தை மாட்டிவைத்து வணங்குகிறார்.

திரைசரம் தொகுப்பு : தேவராஜ்