மோ



மோசடி கும்பலை தெறிக்கவிடும் பேய்!

மக்களிடம் பேய் குறித்த அச்சத்தை உருவாக்கி சுரேஷ் ரவியும் அவருடைய நண்பர்களும் செமத்தியாக துட்டு பார்க்கிறார்கள். இவர்களது பித்தலாட்டத்தை லோக்கல் தொழில் அதிபர் ஒருவர் தெரிந்துகொள்கிறார்.

இவர்களது உதவியோடு உள்ளூரில் இருக்கும் பாழடைந்த பள்ளியை ஆட்டை போட திட்டமிடுகிறார். பள்ளியைக் கைப்பற்ற முயற்சிக்கும் மோசடி கும்பலுக்கு பேரதிர்ச்சி கொடுக்கிறது பேய் ஒன்று. அதன்பின் தடதட வேகத்தில் ஓடும் கதையில் பேயின் ஃப்ளாஷ்பேக் என்ன, சுரேஷ் ரவி பேயின் பிடியில் இருந்து மீண்டாரா என்பதே மீதிக்கதை.

சின்னத்திரை ஹீரோ சுரேஷ்ரவிக்கு பெரியதிரை ஹீரோவாக பிரமோஷன் கிடைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம்போல அட்டகாசப்படுத்தி இருக்கிறார். முனீஸ்காந்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். யோகிபாபு தோன்றும் காட்சியெல்லாம் காமெடியில் பின்னி பெடலெடுக்கிறது.

விஷ்ணுஸ்ரீயின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் இசையும் படத்துக்குத் தேவையான திகிலை ஏற்படுத்துகின்றன. காமெடி பாதி, திகில் மீதி என்று ரசிகர்களை சீட்டு நுனிக்கு கொண்டுவருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் புவன் ஆர்.நள்ளான்.