ரீடர்ஸ் கிளாப்ஸ்!
பூஜாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று மற்ற இதழ்கள் கிசுகிசு எழுதிக் கொண்டிருந்த நிலையில், அவரது திருமண ஆல்பத்தையே பிரசுரித்து வரலாறு படைத்து விட்டது ‘வண்ணத்திரை’. வாசகர்கள் சார்பாக பூஜாவின் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

எதிர்நோக்கும் செயல்களில் வெற்றி குறித்த விருப்பம் எல்லோருக்கும்தான் உண்டு. எனினும் அந்த விருப்பத்தையே வெற்றிக்கான சூத்திரமாக எப்படி மாற்றுவது என்பதை சூர்யாவின் வாழ்க்கை நமக்கு சொல்லித் தருகிறது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

முன்னட்டையில் பைரவா, பின்னட்டையில் சிங்கம் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது இந்தவார ‘வண்ணத்திரை’. விஜய்யின் சினிமா ஃபைலையும், சூர்யாவின் சக்சஸ் ஸ்டோரியையும் ஒருசேர அளித்து இருதரப்பு ரசிகர்களையும் குஷிப்படுத்தி விட்டீர்கள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தட்டிக் கொடுக்க வேண்டியதைத் தட்டிக் கொடுத்து, குட்ட வேண்டியவற்றை குட்டி, விமர்சனம் என்பது எப்படி நடுநிலையாக அமையவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது ‘வீரசிவாஜி’ பட விமர்சனம்.
- ஆர்.கார்த்திகேயன், அண்ணாநகர்.

‘வண்ணத்திரை’ புளோ-அப்புகள், வாசகர்களின் கண்களுக்கு விருந்து.... மனசுக்கு மருந்து.... கருத்துக்கு விறுவிறுப்பு.... உதடுகளுக்கு சுறுசுறுப்பு.... ஒட்டுமொத்தமாக கிளுகிளுப்பு!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘வண்ணத்திரை’ வார இதழின் ஆரம்பகால வாசகன் நான். இடையில் ஆறு ஆண்டுகள் வாசிக்க இயலாமல் போய்விட்டது. வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதைப் போன்ற உணர்வு அப்போது ஏற்பட்டது. மீண்டும், சில மாதங்களாக ‘வண்ணத்திரை’ வாசிக்கிறேன். இழந்ததைப் பெற்ற இன்ப உணர்ச்சியில் மிதக்கிறேன்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

ராசியில்லை என்று கோலிவுட்டால் ஒதுக்கப்படும் நடிகைகள் டோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் போய் நெம்பர் ஒன் ஆகும் வழக்கம் நீண்டகாலமாகவே இருக்கிறது. பிரியங்கா சோப்ராவோ ஒருபடி மேலே போய் ஹாலிவுட்டிலேயே கலக்குகிறார்.
- குந்தவை, தஞ்சாவூர்.