தமிழில் மீண்டும் கஜோல்!பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஏவிஎம்மின் ‘மின்சாரக் கனவு’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார் கஜோல். அதன்பிறகு அவர் தமிழ்ப்படம் எதிலுமே நடித்ததில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கலைப்புலி தாணுவோடு, தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த், திரைக்கதை எழுதி இயக்குகிறார்.அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரிஷிகேஷ் என்று நட்சத்திரப் பட்டாளம் குவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஷான்ரோல்டன் இசையமைக்க, சமீர்தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

- தேவராஜ்