ஒரு நாளைக்கு ஐம்பது லட்சமாம்... ஓக்கேவா?கட்டிக்கிட்ட மொத்த துணியையும் அவிழ்த்து கவர்ச்சி காட்டியும் கூட ‘வஜா தும் ஹோ’ ஓடவில்லை என்பதால் படுசோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் சனாகான்.

‘தங்கல்’ படத்தின் அதிரடி வெற்றிக்குப் பிறகு ‘தங்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்தில் அமீர்கான், அமிதாப்புடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். இது பீரியட் ஃபிலிமாம்.ஜெயலலிதா - சசிகலா இருவருக்குமான நட்பை கதையாக்கி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளில் படமாக்க ராம்கோபால் வர்மா முடிவெடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் ‘குர்பானி’ படத்தின் ‘லைலா ஓ லைலா’ பாடல் ரீமிக்ஸ் செய்து இடம்பெறுகிறது. இதில் முதலில் பிரியங்கா சோப்ராதான் ஆடுவதாக சொன்னார்கள். ஆனால், ஷாருக்கின் மனைவி கவுரிகான் விரும்பியதால் சன்னிலியோனை டக்கராக ஆடவிட்டிருக்கிறார்கள்.

‘பாதுஷாவோ’ படத்தில் இம்ரான் ஹாஸ்மியோடு இஷாகுப்தா படுக்கையறை காட்சிகளில் காட்டியிருக்கும் நெருக்கம் பாலிவுட்டையே பரவசப்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் ஹிரித்திக் ரோஷனின் ‘காபில்’ பட டிரெய்லரைப் பார்த்திருக்கிறார் நம் ரஜினி. அப்படத்தின் தயாரிப்பாளரும் ஹிரித்திக்கின் அப்பாவுமான ராகேஷ் ரோஷன், ரஜினியின் நெடுநாள் நண்பர். ராகேஷுக்கு போன் போட்ட ரஜினி, ஹிரித்திக்கையும் ‘காபில்’ டிரெய்லரையும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.

இந்தியில் ‘கத்தி’ ரீமேக் ஆகிறது, அதில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் ஹீரோயினாக தமன்னாதான் நடிப்பதாக இருந்தது. ஏதோ மாயம் போட்டு அந்த வாய்ப்பை இப்போது தட்டிப் பறித்திருக்கிறார் இலியானா.

படவாய்ப்பு எதுவும் இல்லாததால் டிவி சீரியலில் நடிக்க வாங்களேன் என்று அமீஷாவை சீண்டியிருக்கிறார் ஒரு சீரியல் தயாரிப்பாளர். “ஓக்கே. நோ பிராப்ளம். ஆனா, ஒரு நாளைக்கு என்னோட சம்பளம் ஐம்பது லட்சம். உங்களுக்கு ஓக்கேவா?” என்று அமீஷா ஒரு போடு போட, தயாரிப்பாளர் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தலைதெறித்திருக்கிறார்.

நேஹாதூபியாவோடு சேர்ந்து நடிக்க முடியாது என்று அவருடைய மாஜி பாய் ஃப்ரெண்ட் ரன்வீர்சிங் மறுத்துவிட்டாராம்.லட்சுமிராய் படுகவர்ச்சியாக தன் மொத்த திறமையையும் காட்டியிருக்கும் ‘ஜூலி’, ஃபைனான்ஸ் பிரச்சினையால் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

- ஜியா