கவுண்டமணி பற்றி வதந்திகள் பரவுவது ஏன்?



‘காமெடி கிங்’ கவுண்டமணி உடல்நிலை பற்றி அடிக்கடி வதந்திகள் தமிழகம் முழுக்க பரவி வருகின்றன. கவுண்டமணிக்கு நெருக்கமான ராமராஜன், செந்தில் பற்றியும் இதேபோல வதந்திகள் பரப்புகிறார்கள். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் கவுண்டமணி, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் புதிய கதைகளைக் கேட்டு வருகிறார். அவரால் தங்களது வாய்ப்புகள் பறிபோய் விடுமோ என்று பதட்டப்படும் சிலர்தான் திட்டமிட்டு இந்த வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

- ராஜ்