அமலாபாலின் பொண்ணு!



தமிழில் ரிலீசான ‘அம்மா கணக்கு’, ‘அப்பா’ படங்களில் நடித்திருக்கிறார், காரைக்கால் யுவலட்சுமி. தற்போது 11ம் வகுப்பு படிக்கிறார். நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள அவர், ‘மெழுகு’ படத்தில் கேமரா முன் நின்றார். இன்னும் அது திரைக்கு வரவில்லை. இந்நிலையில், ‘அப்பா’ படத்தில் சமுத்திரக்கனி அவரை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படம் ரிலீசாவதற்கு முன், அமலா பாலின் மகளாக நடித்த ‘அம்மா கணக்கு’ ரிலீசாகி விட்டது. “ரெண்டு படமும் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு. பாலா தயாரிக்கும் படம், சுசீந்திரன் இயக்கும் படம்னு நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு.

டான்ஸ், ஆக்டிங் ரெண்டிலும் நாட்டியப் பேரொளி பத்மினிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் மாதிரி வர ஆசைப்படறேன். படிப்புக்கு பாதிப்பு வராத மாதிரி நடிப்பேன்” என்றார் யுவா.

- தேரா