ட்ரிபிள் ‘ஏ’வில் ஸ்ரேயா!



நீண்ட காலமாக தமிழில் காணாமல் போயிருந்த ஸ்ரேயா மீண்டும் அதிரடி என்ட்ரி கொடுக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘AAA’ என்று சுருக்கமாக சொல்கிறார்கள். அதாவது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்கிற நீண்ட டைட்டிலின் சுருக்கமாம்.

 ஸ்ரேயாவோடு மேலும் இரண்டு ஹீரோயின்களும் உண்டாம். மஹத், விடிவி கணேஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று கூடவே பெரிய நட்சத்திரப் பட்டாளமும் களமிறங்குகிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்குகிறார். முதல் படமே கொஞ்சம் ‘ஏ’ கிளாஸாக அமைந்துவிட்டது. அதிலும் இதில் சிம்புதான் ஹீரோ எனும்போது சிலுமிஷங்களுக்கு பஞ்சமே இருக்காதே என்று ஆர்வத்தோடு அவரைக் கேட்டோம்.

“இல்லைங்க. இது வேற ரூட்டு. அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் செம டிஃபரன்ஸ் இருக்கும். சிம்பு மூணு கெட்டப்புலே நடிக்கிறார். அதிலே ஒரு கெட்டப்புக்காக உடல் எடையை 95 கிலோ வரைக்கும் கூட்டுறாரு. அடர்ந்த தலைமுடி, தாடி, மீசை வளர்க்குறாரு. இதிலே ஒரு சிம்புவுக்கு ஜோடி ஸ்ரேயா. வில்லன்னு தனியா யாருமில்லை. சிம்புவுக்கு வில்லன் சிம்புவேதான்.

இது ஒரு டான் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அதிரடி ஆக்‌ஷன் கலாட்டாவா உருவாகுது. மொத்தம் ஒன்பது பாட்டு. படம் சும்மா பட்டாசாய் இருக்கும்” என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.‘ட்ரிபிள் ஏ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

- தேவராஜ்