ஊர் சுற்றும் காதல்!



சென்னை கோயம்பேட்டில் உள்ள நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்தான் காதல் செய்திகளால் புகழ்பெற்ற அந்த நடிகை தன்னுடைய இயக்குநர் காதலருடன் ரகசியமாக சேர்ந்து வாழ்ந்து வருகிறாராம். இந்த செய்தி அரசல் புரசலாக இண்டஸ்ட்ரியில் பேசப்பட்டு வந்தது போக, இப்போது ஊடகங்களுக்கும் தெரிந்து விட்டதாம்.

கிசுகிசுவாக ஊடகங்கள் எழுதுவதைவிட தானே முன்வந்து இயக்குநருடனான காதலை பகிரங்கப்படுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் நடிகை. எனவேதான் இப்போது பட்டவர்த்தனமாக இருவரும் கை கோர்த்து பொது இடங்களில் தரிசனம் கொடுக்கிறார்களாம்.

காதலன் இயக்கும் கதை விவாதம் மற்றும் ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனிலும் நடிகை பங்குபெறுகிறாராம். எல்லாம் சரி. எப்போது திருமணம் என்று கேட்பவர்களிடம் மட்டும் ஏன் எரிந்து விழுகிறாரோ தெரியவில்லை.

- லார்டு கிங்