நடுப்பக்க கவர்ச்சி! வாசகர் கண்டனம்!!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நமக்கே நன்றாகத் தெரிந்த வீரப்பன் கதையை விதவிதமாக ரீல் சுற்றி நம் காதில் பூவாக சுற்றிய ராம்கோபால் வர்மாவை நோக்கி, ‘தமிழர்கள் மடையர்களா?’ என்று ‘வண்ணத்திரை’ தன் சாட்டையை சொடுக்கிய சீற்றத்துக்கு சல்யூட்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘ஓ பாப்பா லாலி’ என்று நாகார்ஜுனாவின் மடியில் தவழ்ந்து சுட்டித்தனம் செய்து நம் இதயத்தை திருடிய கிரிஜாவா இதுவென்று ‘அன்று இன்று’ போட்டோவைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.

ஒரு கோடி சம்பளம் கேட்கும் கே நடிகை, சீக்கிரமாக தெருக்கோடிக்கு வந்துவிடாமல் இருந்தால் சரிதான்.
- குந்தவை, தஞ்சாவூர்

‘ஜொள்ளுவிட வைக்கும் பண்டம் எது?’ என்கிற கேள்விக்கு சரோஜா சொன்ன பதில் அதிரடி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘வண்ணத்திரை’ வரலாற்றிலேயே முதன்முறையாக கொஞ்சம் கவர்ச்சி குறைந்த படத்தை நடுப்பக்கத்தில் போட்டு ஏமாற்றி விட்டீர்கள். கடுமையான கண்டனங்கள்.
- ராம்குமார், திருநெல்வேலி.

‘சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்’ ஆரம்பமே அபாரம். வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் எளிமையான நடையில் தொடர் முத்திரை பதிக்க வாழ்த்துகள்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.